Wednesday, April 15, 2009

திமுக அலுவலகம் எரிப்பு; மர்ம மனிதர்கள் யார்?


மதுரையில் நான்கு இடங்களில் செவ்வாயன்று நள்ளிரவு திமுக தேர்தல் அலுவலகங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன. இது குறித்து திமுகவினர் நேரடியாக மார்க்சிஸ்ட் கட்சியினர் மீது புகார் கொடுத்திருக்கின்றனர். யார் எரித்தார்கள் என்றே தெரியாத நிலையில், நேரில் பார்த்த சாட்சிகள், தடயம் என்று எதுவுமே இல்லாத நிலையில் உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று கேட்டிருந்தால் அதில் நியாயம் இருக்கும்.

அதற்கு மாறாக, நேரடியாக மார்க்சிஸ்ட் கட்சியனர் மீது புகார் கொடுத்திருப்பது, மார்க்சிஸ்ட் கட்சி வன்முறை கட்சி என்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி, அரசியல்ரீதியாக பீதி ஏற்படுத்த முயல்வதைக் காட்டுகிறது.வன்முறை அரசியலுக்கு லீலாவதி போன்ற கட்சியின் அருமையான கண்மணிகளை இழந்தவர்கள் மார்க்சிஸ்ட்டுகள். அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் வன்முறை அரசியல் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் மார்க்சிஸ்ட்டுகள் என்பது மதுரை மாநகர மக்கள் நன்கு அறிந்ததே. அதே சமயம் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் சகிப்புத் தன்மை இல்லாமல் தீ வைப்பது என்பது மதுரை திமுகவினருக்கு கைவந்த கலை. தினகரன் பத்திரிகையில் வந்த கருத்துக் கணிப்புக்காக அந்த பத்திரிகை அலுவலகத்தை தீ வைத்து எரித்து மூன்று அப்பாவி இளைஞர்களை உயிரோடு கொளுத்தியவர்கள் யார் என்பதையும் மதுரை மக்கள் நன்றாக அறிவார்கள்.எனவே திமுகவினரே இந்த தீ வைப்பை நடத்திவிட்டு நாடகமாடலாம் என்றே பெரும்பான்மையான மக்கள் கருதுகின்றனர்.

இதுமட்டுமின்றி இந்த தீ வைப்பு சம்பவங்கள் பற்றி வேறு சில கருத்துக்களும் உலா வருகின்றன. மதுரை தினகரன் அலுவலகத்தை எரித்த ரௌடிகளை கலாநிதி மாறன், தயாநிதி மாறன் சகோதரர்களால் அப்போது சட்டத்தின் முன்பாக நிறுத்த முடியவில்லை. எனவே தற்போது தேர்தல் சூழ்நிலையை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அவர்களே இந்த பதிலடி நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.அதேபோல் மு.க.அழகிரி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதை இளைய பட்டம் மு.க.ஸ்டாலின் விரும்பவில்லை என்றும் ஒரு கோஷ்டியினர் கூறுகின்றனர். எனவே அவர்களே கூட இது போன்ற செயல்களில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் திமுகவிற்கு நெருங்கிய வட்டாரத்தினரே கிசுகிசுத்துக் கொள்கின்றனர்.

1 comment:

  1. உங்களின் வருகைக்காக நெல்லைத்தமிழ் புக்மார்க் தளம் காத்திருக்கிறது...

    தளமுகவரி...
    nellaitamil

    ReplyDelete