Thursday, April 9, 2009

நீங்க நல்லவரா கெட்டவரா?

மதுரையில் அழகிரி நிற்கிறார் என்றவுடன் காம்ரேடுகள் வெலவெலத்துப் போய்விட்டார்கள் என்று பத்திரிகைகள் எழுதிக்கொண்டிருந்தன. முதல்வரும் அந்தக்கருத்தை தத்து எடுத்துக் கொண்டிருக்கிறார். அவர் அதோடு நிற்கவில்லை. அறிக்கை என்ற பெயரில் சகட்டு மேனிக்கு ஏச்சுப் பேச்சில் இறங்கியுள்ளார். வெலவெலத்துப்போயுள்ளார்கள் என்பது ச்ச்சும்மாhh... பத்திரிகைகள் கிளப்பி விட்டதுதான் என்ற உண்மை அவர் வீட்டுக்கதவைத்தட்டியுள்ளது.

காம்ரேடுகளோ, தொகுதியில் நடக்கும் அராஜகங்களைக் கண்டித்து ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களைத் திரட்டி பெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்குப்பிறகுதான் முதல்வரின் கைகள் பேனாவைத் தேடியுள்ளன. மகன் தோற்றுவிட்டால் என்ன ஆவது என்ற பயம் அவரைத் தொற்றிக் கொண்டது. அந்த பயம் எழுத்தில் தெரிகிறது. பணபலத்தைத் தாண்டி எந்த பலத்தை பிரயோகப்படுத்தலாம் என்று உடன்பிறப்புகள் தேட வேண்டிய கட்டாயத்தை இந்தக் கடிதம் ஏற்படுத்தியுள்ளது.இக்கடிதத்திற்கு சிபிஎம் செயலாளர் என்.வரதராஜன் பதிலடி கொடுத்துள்ளார். கலைஞரின் கடிதத்திற்கும், வரதராஜனின் கடிதத்திற்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. கலைஞரின் கடிதத்தில் ஆத்திரத்தின் காரணமாக நாகரீகம் மி°ஸிங். ஆனால் என்.வரதராஜனின் கடிதம் அரசியல் ரீதியான பதிலாக அமைந்துள்ளது. அதில் பொருத்தமாகவே, அச்சமில்லை.. அச்சமில்லை... அச்சமில்லையென்பதே... என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர்களின் அரசியல் விவாதங்கள் ஒருபுறம். மதுரை மக்கள் எங்கு நிற்கிறார்கள்..? இவர்கள் முன்னால் இருக்கும் கேள்வி மிக முக்கியமானது. மதுரையிலிருந்து வந்த நண்பர் ஒருவர் குறிப்பிட்டார். சில மாதங்களுக்கு முன்பு மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்த கடைகளில் இருந்த விலைக்கும் தற்போதுள்ள விலைக்கும் பெரும் வேறுபாடுகள் உள்ளன. அந்தக்கடையில் ஒரே ஒரு மாற்றம்தான் ஏற்பட்டுள்ளது. முன்பு அக்கடைகளில் மு.க.அழகிரியின் படம் தொங்கவில்லை. தற்போது தொங்கிக்கொண்டிருக்கிறது. கடைக்காரர்கள் தங்கள் இஷ்டத்திற்கு விலையை நிர்ணயித்துக்கொள்ள லைசன்° போல நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இவையெல்லாம் அழகிரி என்ற பெயருக்குப்பின் எதுவும் இல்லாதபோது நடக்கிறது. ஒருவேளை எம்.பி.யாகிவிட்டால், இத்தகைய அராஜகங்களுக்கு மக்கள் அங்கீகாரம் கொடுப்பது போலாகி விடும். இவையெல்லாம் பற்றி மக்கள் விவாதிக்காமல் இல்லை. சிலர் ப°ஸில், ரயிலில், கார்களில்... இன்னும் சிலர் அக்கம்பக்கத்தில்... பெரும்பாலானவர்கள் தங்கள் மனதுக்குள்ளேயே... நிறைவாக, அருகில் இருப்பவர்களிடம் அனைவருமே கேட்க விரும்பும் கேள்வி இதுதான்...

நீங்க நல்லவரா... கெட்டவரா...??

நல்லவராக இருந்தால் நல்லவருக்கு வாக்களியுங்கள். கெட்டவராக இருந்தால்.....????

3 comments:

  1. congratulation. please day to day update this and join www.thamizmanam.com, www.tamilish.com, www.tamilveli.com, and other blogsphere. they only give links to the world.

    ReplyDelete
  2. அழகிரிக்கு ஒரு வேண்டுகோள்....
    நீங்கள் மதுரையின் நாடாளுமன்றக்குழு உறுப்பினராகவே ஆகிவிட்டீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.
    கீழ்வரும் உங்கள் தொண்டரடிப் பொடியாழ்வார்களை தாண்டி உங்களை தரிசிக்க முடியுமா? உங்கள் பொறுப்பு எல்லாவற்றையும் இவர்களிடம் விட்டு விட்டு மதுரையை சுற்றி நீங்கள் வாங்கி வைத்திருக்கும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் இருக்கும் பண்ணை வீடுகளில நீச்சலடிக்க போய் விடுவீர்கள்.பிறகு மதுரையை யார் காப்பாற்றுவது? உங்களுக்கு தெரியாவிட்டால் இருந்து விட்டு போகட்டும். நீங்கள் பதவி கொடுத்துள்ள சிலரின் லடசணத்தை பாருங்கள். இப்படி முடிவெடுக்கும் நீங்கள் மதுரை எம்பி ஆகத்தான் வேண்டுமா....?
    தேன்மொழி்
    எழுத படிக்க தெரியாத இவர் உங்களின் ஆசியால் மதுரை மேயராக ஆக்கப்பட்டவர். இவரது கணவர் கோபிநாதன். மதுரை மத்திய பேருந்து நிலையத்தில் வெளிநாட்டு துணிகள் என்ற பெயரில் தரையில் கடை விரித்து படிப்படியாக முன்னேறியவர்??எந்த வித பெரிய வருமானமும் இல்லாமல் இருந்த கோபிநாதன் இன்று மதுரையின் பிரபல கோடீஸ்வரர். உங்களின் அடிப்பொடியாக இருந்த கோபிநாதனுக்கு மதுரை மாநகராட்சியின் தெற்குமண்டல தலைவர் பதவியை கொடுத்து அழகு பார்த்தீர்கள். இந்த கோபிநாதனின் லட்சணம் என்ன தெரியுமா? இவரது மண்டலத்திற்குட்பட்ட எந்த இடததில் வீடு கட்டினாலும், எலவு விழுந்தாலும் மாநகராட்சி இடத்தை பயன்படுத்துவது தெரிந்தால் அங்கே கோபிநாதனின் கார் போய் நிற்கும். 10 ஆயிரமோ, 20 ஆயிரமோ கொடுத்தால் தான் கார் கிளம்பும். இல்லாவிட்டால் வீடு கட்ட முடியாது.
    கோபிநாதனின் மனைவியான தேன்மொழி, மேயர் ஆன பிறகு தான் வீட்டில் காகித பேப்பர்களில் கையெழுத்து போடவே கற்றுக் கொண்டது தனிக்கதை.இப்படி எந்த படிப்பறிவும் இல்லாத ஒரு பெண்ணை மேயராக்கினால் மதுரை எப்படி வளரும்? அதைப்பற்றி எல்லாம் உங்களுக்கு என்ன கவலை? தேன்மொழியை மேயராக்கியது எதற்காக?
    துணைமேயர் பி.எம்.மன்னன்
    திமுக வின் முன்னாள் அமைச்சரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான தா.கிருஷ்ணன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அந்தக் கொலையில் தற்போது மதுரையின் துணைமேயராக இருக்கும் மன்னன் 2 வது குற்றவாளி உங்கள் நண்பர் என்பதற்காக இவருக்கு துணைமேயர் பதவி.ஒரு காலத்தில் நண்பர்களிடம் ஓசி சட்டை வாங்கி அணிந்து கொண்டிருந்த பி.எம்.மன்னனின் இன்றைய சொத்து மதிப்பு சுமார் 100 கோடி என்கிறது மாநகராட்சி வட்டாரம். இது தவிர பினாமிகளை வைத்துஒரு விளம்பர ஏஜன்சியை நடத்தி வருவது தனிக்கதை. மாநகராட்சி வீதிகளில் போர்டுகளை குழி தோண்டி (வழிகாட்டி பலகைகள்) அதில் பெயரளவுக்கு திருக்குறளை எழுதி வைத்துவிட்டு விளம்பரங்களை எழுதி வைத்திருக்கிறார்கள். இதில் எவ்வளவு பணம் யார் பாக்கெட்டுக்கு போகிறது என்பது மன்னனுக்கே வெளிச்சம்.
    எஸ்ஸார் கோபி
    மதுரை விமானநிலையம் அமைந்துள்ள இடத்தின் குறுநில மன்னர் இவர். சூதாட்ட விடுதி, திருட்டு விசிடி தொழிற்சாலை, விபச்சாரம் என்று செயது வருவது உங்களுக்கு தெரியாதா? தா.கிருஷ்ணன் கொலை வழக்கில் 3 வது குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட இவர் நடத்தும் சூதாட்ட கிளப்பில் விளையாட . சென்னையில் இருந்து கூட விமானத்தில் வந்து லடசக்கணக்கில் பணத்தை வைத்து விளையாடி விட்டு செல்கிறார்கள். இது தெரியாதா உங்களுக்கு?
    அட்டாக் பாண்டி
    உங்களை குறைத்து மதிப்பிட்டதற்காக தினகரன் பத்திரிகை அலுவலகம் மதுரையில் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதில் 3 பத்திரிகையாளர்களும் கொளுத்தப்பட்டனர். இந்த தீவைப்பு தாக்குதலை தொடங்கி வைத்தவர் தான் அட்டாக் பாண்டி. குழந்தைகள் பார்த்தால் நிச்சயமாக மயக்கம் போட்டு விழுந்து விடும் தோற்றம் இவருக்குநீங்கள் கொடுத்த பரிசு என்ன? மதுரை மாவட்ட வேளாண்விற்பனைக்குழு தலைவர் பதவி. அய்யோ...ஒரு முன்னோடி விவசாயிக்கு இந்த பதவி கொடுக்கப்பட்டிருந்தால்...மதுரையின் வேளாண்மை சிறந்திருக்குமே?...படிக்கவே இலலாத, பயிருக்கும், பல்லிக்கும் வித்தியாசம் தெரியாத பல குற்றவழக்குகளில் ஈடுபட்ட ஒரு ரவுடிக்கு நீங்கள் வேளாண்விற்பனைக்குழு தலைவர் பதவி அளித்தீர்களே...இதன் அர்த்தம் என்ன?
    மிசாபாண்டியன்
    இவரை போல் ஒரு பச்சோந்தியை பார்க்கவே முடியாது. ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் அம்மாவே சரணம் என்றார். பிறகு திமுக வுக்கு வந்து சேர்ந்தார். குறைந்த படசம் 100 ரவுடிகள் புடை சூழ இருக்கும் மிசா உங்கள் வீ்ட்டிற்கு அருகில் குடியிருப்பது தான் வேறு வழியே இல்லாமல் நீங்கள் மிசாவை வைத்திருக்க காரணம். ஏனெனறால் உங்களை காப்பாற்ற உங்களுக்கு மதுரையில் யார் சொந்தங்கள்? எச்சி சோற்றுக்கு 100 காக்கா..அதில் மிசாவும் ஒன்று .
    வி.கே.குருசாமி
    ஒரு காலத்தில் லோடுமேன் வேலை பார்த்த இவர் இப்போது மதுரை மண்டலத்தலைவர்..
    இப்படி பட்டியல் நீளுகிறது. நக்கீரனும், சிவனும் விவாதம் நடத்திய மதுரையில் உங்களின் கைங்கர்யத்தால் யாரெல்லாம் மதுரையை ஆளும் நிலையில் இருக்கிறது பார்த்தீர்களா...அரசியலுக்கு இலக்கணம் வகுத்த வள்ளுவன் வந்து பார்ததால் ....மூர்ச்சையாகி விழுந்து விடுவான். நீங்கள் எம்.பி யாகி விட்டால் மதுரை என்னவாகும்?தயவு செய்து நீங்கள் தேர்தலில் நி்ற்கத்தான் வேண்டுமா? கொஞ்சம் சிந்தியுங்கள்...மதுரை மக்கள் நன்றாக இருந்து விட்டு போகட்டுமே..பாவம் விட்டுவிடுங்கள்.

    ReplyDelete
  3. ஆரப்பாளையம் பஸ் நிலையத்தின் உள்ளே இருக்கும் பல கடைகளுக்கு மாநகராட்சி அங்கீகாரம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. காரணம், இந்த கடைகள் அனைத்தும் அழகிரியின் அல்லக்கையான துணைமேயர் மன்னனின் பின்னால் சுற்றும் எடுபிடிகளுக்கும், ரவுடிகளும் பிழைத்துக் கொள்ள ஒதுக்கப்பட்ட கடைகள். இங்கிருக்கும் இலவச கழிப்பறை கூட மன்னனின் அல்லக்கைகளால் மக்களிடம் காசு பிடுங்கி கொண்டு தான் பயன்படுத்த அனுமதிக்கப்படுகின்றது. இந்த கடைகளில டீ. 5 ரூபாய். இதில் டீத்ததூள் போட்டு டீ போடுவது கிடையாது.மரத்தூள் கலப்படத்தை பயன்படுத்தி டீ ஆற்றுகிறார்கள். விலையக் கேட்டு விட்டு டீ வேணாம் என்றால் பாசக்கார பயலுகளின் கெட்ட வார்த்தைகளை டீ கேட்டவரால் தாங்கி கொள்ளவே முடியாது. மொத்தத்தில் மதுரைக்காரர்க்ளை மட்டும் அல்லாமல், இங்கு வரும் வெளியூர்க்காரர்களையும் வசவு, எதிர்த்தால் அடிதடி என்று கவனித்து அனுப்புகிறது அழகிரியின் அல்லக்கைகள். கவனம் வெளியூர் வாசிகளே......மதுரைக்கு வந்தால், குறி்ப்பாக அழகிரியின் அல்லக்கைகளின் பிடியில் உள்ள ஆரப்பாளையம் பஸ் நிலையத்திற்கு வந்தால் கடைகளில் எந்த பொருளையும் வாங்காதீர்கள். இங்கு கடை விரித்திருப்பவர்களில் 80 சதவீதம் பேர் கிரிமினல் குற்றவாளிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்கள் எல்லாரும் திமுக துணைமேயர் மன்னனின் ஆட்கள். மற்றும் 4 ம்பகுதி திமுக செயலாளர் ஜெயராமின் ஆட்கள். வெட்டுக்குத்துக்கு துணிந்தவர்கள். எனவே கவனம் உங்கள் உடைமயும்உயிரும்...

    ReplyDelete